ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்


தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தில் பங்கேற்க இணையவழிப்பதிவு


நாள்: 13.12.2013 இடம்: ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நேரம்: காலை 9.30 மணி

        ஈரோடு பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் 13.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்த்த உள்ளது. இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றி, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்க உள்ளார். ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப. கமலக்கண்ணன் இந்த பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார்.


       இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் வலைதளத்தில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.


Form Object


தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்


நாள்: 13.12.2013 இடம்: ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நேரம்: காலை 9.30 மணி

தமிழ்க்கணினி ஓர் அறிமுகம்


        இன்றையச்சூழலில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கணிப்பொறியோடு தொடர்புடையவர்களாகவே இருந்து வருகின்றோம். அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் கணினி சார்ந்ததாக மேம்பட்டு வருகின்றன. பெரும் எண்ணிக்கையிலான அலைபேசிகள் கணிப்பொறியின் பயன்பாடுகளோடு பெருமளவில் சந்தையில் கிடைக்கின்றன. அரசின் மின்னாட்சி (e-governance) செயல்பாடுகளுக்கு கணிப்பொறிகளும், அலைபேசிகளும், பலகைக் கணினிகளும் (tablet PC), மடிக்கணினிகளும் (laptop) பெருமளவில் உறுதுணையாக உள்ளன.


        கணிப்பொறி, அலைபேசி, பலகைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி உள்ளீட்டைச்செய்வது மிக எளிய செயல். ஆனால், மேற்குறித்த கருவிகளில் தமிழ் உள்ளீட்டை (Tamil Input) ஒருவர் செய்வதற்கு தமிழ் உள்ளீட்டைக் கற்கவும் பழகவும் வேண்டியுள்ளது. கணிப்பொறி மற்றும் கணினி சார்ந்த கருவிகளிலும் அலைபேசியிலும் தமிழ் உள்ளீட்டிற்கு தமிழ் எழுத்துருவை (font) நிறுவினால் (installation) மட்டுமே தமிழில் தட்டச்சு (typing) செய்ய இயலும். கணிப்பொறி மற்றும் கணினி சார்ந்த கருவிகளிலும் அலைபேசியிலும் தமிழ் உள்ளீட்டை தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் (Tamil Unicode Fonts ) மிக எளிதாக்கி உள்ளன.


தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களின் நன்மைகள்


        தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் தமிழக அரசால் ஏற்பளிக்கப்பட்டவையாகும். தமிழ்99விசைப்பலகையை தரப்படுத்தியுள்ள தமிழக அரசு, அவ்விசைப்பலகையே தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் தமிழ் இணையப்பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தவை ஆகும். இந்த எழுத்துருக்களைக்கொண்டு கணிப்பொறியில் அனைத்துப்பணிகளையும் செய்யலாம். தமிழில் மின்னஞ்சல் செய்ய, தமிழில் இணையதளங்களை உருவாக்க, தமிழில் சொற்செயலியைச் செயற்படுத்த (word processor), தமிழ்ச்சொற்களை அகரவரிசைப்படுத்த (alphabetical sorting), தமிழில் தேடுபொறியைப் (search engine) பயன்படுத்த, சொற்பிழை நீக்க, சந்திப்பிழைத்திருத்த, நிரலாக்க மொழியாகப் பயன்படுத்த என பல்வேறுநிலைகளிலும் பயன்படுத்தலாம்.


தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள்: தமிழ் ஒருங்குகுறி எழுதிகள்


        கணிப்பொறிகளிலும், மடிக்கணினிகளிலும் ஒருங்குகுறி தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை செல்பேசியில் நிறுவி (instalation) தமிழ் உள்ளீட்டைச்செய்யலாம்.

என்ஹெச்எம் ரைட்டர் http://software.nhm.in/products/writer,
தமிழ் விசை https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/
இ-கலப்பை http://thamizha.com/project/ekalappai
டபல்யூ3தமிழ் http://wk.w3tamil.com/
தமிழ் (இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டும்) http://www.tamil.sg/

தமிழ் எழுத்துரு மாற்றிகள்


        மரபார்ந்த தமிழ் (traditional fonts) எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவாக மாற்ற பின்வரும் மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

சுரதா http://www.suratha.com/reader.htm
என்ஹெச்எம் ரைட்டர் NHM Converter http://software.nhm.in/products/converter
கண்டுபிடி http://kandupidi.com/converter/

தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைத் தரவிறக்கம் செய்ய


        தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைப் பின்வரும் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ் எழுத்துருத் தரவிறக்கம் http://www.elcot.in/tamilfonts_download_list.php
தேசியத் தகவலியல் நடுவம் http://www.tn.nic.in/tamilsw/otf.htm
தெற்காசிய மொழிவள நடுவம் http://salrc.uchicago.edu/resources/fonts/available/tamil/
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் http://www.wazu.jp/gallery/Fonts_Tamil.html

அலைபேசியில் ஒருங்குகுறி தமிழ் உள்ளீட்டிற்கு


        ஆண்ட்ராய்டு இயங்குதள செல்பேசிகளில் தமிழ் ஒருங்குறியைப்பயன்படுத்த தமிழ் விசை https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en, என்னும் மென்பொருளையும், செல்லினம் https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en, பொன்மடல் ஆகிய மென்பொருள்களைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை செல்பேசியில் நிறுவி (instalation) தமிழ் உள்ளீட்டைச்செய்யலாம். ஐஃபோன்களில் ios7 என்னும் இயங்குதளத்தில் செல்பேசியில் தமிழைப்பயன்படுத்த, மொழித்தேர்வில் (language option) தமிழ் என்று தேர்வு செய்து பயன்படுத்தலாம்.


தமிழ் மின்னூலகம்


        தமிழகம். வலை http://thamizhagam.net/ என்னும் வலைதளத்தில் 3000க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்களைக்கொண்ட தமிழ் மின்னூலகம் நிறுவியுள்ளது. நூலகம் http://www.noolaham.org என்னும் தளத்தில் இலங்கையைச் சார்ந்த 3944 நூல்கள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் http://www.tamilvu.org/ அரிய ஓலைச்சுவடிகளும், 4000க்கும் மேற்பட்ட நூல்களும், பண்பாட்டுக் காட்சியகமும் உள்ளன.


ஆக்கம்: மா. தமிழ்ப்பரிதி, 9750933101, tparithi@gmail.com