நீண்ட மரங்களின் மீது நான்
நீண்ட மரங்களின் மீது அமர்ந்திருக்கிறேன்
அசையும் கால்களைக் கொண்டு
கவிதை போல ஒன்று தேவைப்படுகிறது
வடிவ பாவம் ஒன்றும்
தலைச்சுமைக்கருகில் ஏறவில்லை
அசையும் கால்களுக்கும் பூமிக்குமிடையே
ஓடிக்கொண்டிருக்கிறது
திசை
காற்றைப்போலவே மிருதுவாக இருக்குமோ
என் கவிதையின் விசை
சட்டென்றெங்கோ பெயர்ந்து
கிளை பரப்பி வருகிறது
ஆங்காரத்துடன் காற்று
வீசியெறியப்படுகிறேன்
காற்றின் உயரத்தில் வைத்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
மனசு
மரங்களின் மண்டையில் மோதி
தாக்குறும் கணத்தில்
தலைக்குப்புற பூமிக்கு வருகிறேன்
சாவகாசமாக முணுமுணுத்தபடி
ஊர்ந்து செல்கிறது
அட்டைப்பூச்சி
வரும் எனது நெற்றிக்கு
நேர் கீழே
நீண்ட மரங்களின் மீதர்ந்திருக்கிறேன்
உயிர்பிடித்து நிற்கின்றன
உயரமான மரங்கள்
- அய்யப்பன் மகாராஜன்
