நெய்தல் சுவடுகள்
நூலின் பெயர்: நெய்தல் சுவடுகள்
ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்
முதற்பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: தமிழ் நாடு மீன் தொழிலாளர் யூனியன், 13/2, முதல் தளம், கேசரிதெரு, நாகர்கோயில் - 629001.
நூல் விலை: உரு.120/, உரு.160/-(நூலகப்பதிப்பு)
|
ஆவணப்படுத்தப்படவேண்டிய கடல் சார்ந்த வாழ்க்கையின் கண்ணீரும் ரத்தமும் கலந்த சமகால வரலாறு, விளிம்புகளில் தவித்து போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலை, உரிமையை நிலைநிறுத்தும் தீட்சண்யமிக்க பார்வை. - ஹெச்.ஜி.ரசூல்
நெய்தலை நேசிக்கும் ஓர் உயிர்ப்புமிக்க அறிவு ஜீவியின் பார்வை. மீனர்வகள் தங்கள் வாழ்வின் உரிமைகளை ஒருநாள் வென்றெடுப்பார்கள் என்ற கனவுக்குச் சொந்தகாரர் வறீதையா கான்ஸ்தந்தின் . -பி.மரிய சூசை
கடலைகளோடு போராடும் அன்றாட வாழ்க்கை, அதிகார அமைப்புக்களால் புறக்கணிக்கப்பட்டுவரும் அவலம், மீன் விற்பனைக்குச் செல்லும் பெண்களின் துயரம், கடற்கரை மணலில் புதைந்து அழியும் இளம் தலைமுறையின் திறன்கள் இவற்றையெல்லாம் உடனிருந்து அனுபவித்த மண்ணின் மகன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். - லூயிஸ், கே. ஓ.

|