|
வாழ்க்கையின் அனுபவத்தழும்புகளை அடையாளப்டுத்திக் காட்டிய இந்த நூல், கற்பனைக் குவியலன்று. சமுதாயக் களத்தில் உணர்ந்திருப்பதை நன்கு உணர்த்திக்காட்டும்படியான ஊன்றுகோல் நூல். வாழ்க்கைபோக்கில் இழுக்கு நேர்ந்துவிடும் போதும், வழுக்கிவிடும் போதும், மனத்தை நழுவ விடாமல், வலிமை ஊட்டி, இதயத்தை எஃகாய் ஆக்கி ஏவுகணையாய் பாயும் ஆற்றலைத் தரும்படியான நூல்!
ஒவ்வொரு கணமும் மனிதன் வாழ்க்கையை வெற்றி கொள்ளவே முயல்கிறன். ஆனால் இதற்காக அடையும் வழிவகை தெரியாதிருக்கிறான். இந்த நூலைப்படிதாலே போதும், இதற்காக நாம் மேனாட்டில் தன்னம்பிக்கை நூல்களால் பேர் பெர்ற நார்மன் விசெண்ட் ஃபீல், காஃப் மேயர், போன்றோரின் நூல்களில் தலை நுழைக்கத்தேவையில்லை.இந்த உள்ளூர்த்தன்னம்பிக்கைகாரரான கவி முகிலின் இந்த ஒரு நூலே போதும் வாழ்வில் வெற்றி பெற! இவ்வகையில் அப்துற்றஹீம், உதய மூர்த்தி, மெர்வின் முதலியோர் வரிசையில் அணிசேர்கிறார் இந்நூலாசிரியர் கவிமுகில்.
-நூலின் அறிமுக உரையில் பொன்னி நாடன்
|
எதிரே உன் ஏணி
நூலின் பெயர்: எதிரே உன் ஏணி
ஆசிரியர்: கவிமுகில்
முதற்பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: வள்ளிசுந்தர் பதிப்பகம் ப.எண்:43/14,பு.ஏண்:84/14, மீர் பக்க்ஷி அலி தெரு, இராயப்பேட்டை,சென்னை-600014.
செல்லிடப்பேசி: 9840168517.
நூல் விலை: உரு.30/-

|