தகவல் பெறும் உரிமை
நூலின் பெயர்: தகவல் பெறும் உரிமை
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி
முதற்பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: பொன்னி,2/1785, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-600091,
நூல் விலை: உரு.35/-
|
எந்த ஆட்சி மாறினாலும், ஊழல் தொடரும். அளவும் தரமும் மட்டுமே வேறுபடும் என்ற நிலையை அடைந்துவிட்டது நமது அரசியல் அமைப்பு. சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயங்கரவாதப் பெருக்கத்திலும் ஊழலுக்கு முக்கியமான் பங்கு உள்ளது. இதை மாற்றியமைக்கா விட்டால், எதிர்கால தலைமுறைகள் தொடர்ந்து இடர்ப்படுவது உறுதி.
இந்தப் போராட்டத்தில் கிட்டியிருக்கும் புதிய ஆயுதமான தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றிய இந்த நூல், மனித சமுத்துவம், மனித உரிமை, பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை முதலியவற்றை விழையும் ஒவ்வொருவருக்கும் பயன்படும் அரிய வரவு என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அறிமுகவுரையில் -ஞாநி
இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்கள் கையில் கிடைத்திருக்கும் ஓர் அரிய சட்ட ஆயுதம்.
இதன் மூலம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர்களின் திட்டங்களையும் அவை நடைய்றைப்படுத்தப்படும் விதங்களையும் மக்கள் கண்காணிக்க முடியும்.
இச்சட்டப்படி அரசுத் துறைசார்ந்த தகவல்களை கேட்டுப்பெற்று அதனை ஆய்வு செய்து திட்டங்களை நிறைவேற்றியவர்களையும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளையும் நாம் கேள்வி கேட்க முடியும்.

|
|
அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் குடும்ப வன்முறை நிகழ்வுகளை விசாரிக்க தனியானதொரு அமைப்பு உருவக்கப்பட்டது.பெண்ணுரிமை என்பது மனித உரிமையின் பிரிக்க முடியாததொரு அங்கம் என்ற முழக்கம் 1993 வியன்னா மாநாட்டில் வலுப்பெறத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகள் குடும்ப வன்முறையைத் தடுக்கும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தின. இந்தியாவில் தற்பொது நடைமுறைக்கு வந்துள்ள குடும்ப வன்முறைத் தடைச்சட்டம் பெண்களுக்கெதிரான வன்முறை நிகழ்வுகளை முற்றும் முழுதாக நிறுத்திவிடும் என்று சொல்ல முடியாது. இருள் மிகுந்த வானில் சின்னதொரு மின்னல் கீற்று!
|
குடும்ப வன்முறைத் தடைச் சட்டம்
நூலின் பெயர்:குடும்ப வன்முறைத் தடைச் சட்டம்
ஆசிரியர்: இரா.சுப்ரமணி
முதற்பதிப்பு: 2006
வெளியீடு: சாளரம்,854 (ப.எண்.387),அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600015.
தொலைபேசி: 044-24333235.
நூல் விலை: உரு.50/-

|
உயிரோடு புதைக்கப்பட்டவன்
நூலின் பெயர்: உயிரோடு புதைக்கப்பட்டவன்
ஆசிரியர்: இரா.சுப்ரமணி
முதற்பதிப்பு: டிசம்பர் 2006
வெளியீடு: சாளரம்,854 (ப.எண்.387),அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600015.
தொலைபேசி: 044-24333235.
நூல் விலை: உரு.60/-
|
இந்திய விடுதலைக்காக இந்தியாவில் போராடியவர் பகத்சிங். வெளிநாடுகளில் போராடியவர் அஜீத்சிங்.இவர் பகத்சிங்கின் சிற்றப்பா. அஜீத்சிங், இந்திய விடுதலைக்காக ஐரோப்பிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் போராட்டத்தளம் அமைத்தவர். ஆங்கிலேயனை எதிர்ப்பதற்கென்றே ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டு சர்வாதிகாரிகளைக்கூட சந்தித்து உதவி கேட்டவர். ஆங்கிலேயரைச் சுமார் 40 ஆண்டு காலம் அயலக நாடுகளில் நின்ரு எதிர்த்த அஜீத்சிங்கின் வீரம்செறிந்த வரலாறு இந்நூல்.

|
|
|
தமிழ் நூலகம்
|
தமிழ்த்தளங்கள்
|
திரைப்படங்கள்
|
இணைப்புகள்
|
பிற தளங்கள்
|
|