சின்ன உளிகள்
நூலின் பெயர்: சின்ன உளிகள்
ஆசிரியர்: கவிமுகில்
முதற்பதிப்பு: 16/06/2001
வெளியீடு: கவியரசன் பதிப்பகம், மேடவாக்கம் முதன்மைச்சாலை, ஆதம்பாக்கம், சென்னை - 600088. தொலைபேசி :044 - 65334444 . செல்லிடப்பேசி: 9444445555.
நூல் விலை: உரு.50/-
|
கவிஞரின் எழுதுகோல், சிந்தனைத் துளிகளைத் துளிப்பாக்களாக எழுதிச் சென்றுள்ளது. இவரது எழுதுகோல் சின்னச் சின்னக் கவிதைகளில் மகரந்தங்களையும் அள்ளி வந்துள்ளது. மகரந்தங்களில் சயனைடும் கலந்துள்ளது. மென்மையும் வன்மையும் சமூகத்தின் இரு பார்வைகள். தாமரை இலையைக் காயப்படுத்தாமல் அதன் மீது நடந்து செல்லும் கொக்கின் லாகவ மென்மையும், பூவின் முகங்களில் சுவடு தெரியாமல் வந்தமர்ந்து தேன் உறிஞ்சும் வண்டின் மென்மையும் இவரது கவிதை மென்மைக்குக் கட்டியம் கூறுவனவாய் உள்ளன. எரிமலையின் விளிம்பில் நின்று எதிர்கொள்ளும் வன்மையும் மூர்க்கத்தின் முகிலைக் கிழித்துப் பாயும் ஏவுகணைப் பார்வையும் காணலாம். இவையெல்லாம் கவிஞனிடம் இருக்கும் கையிருப்புகளே ! எனினும், சமுதாயத்தில் காணப்படும் நடப்புகளுக்கு ஏற்ப அவை சிந்தனை கொள்ளும்; செம்மாந்து நிற்கும். கவிமுகிலிடம் அந்த இரு பார்வைகளும் தடுமாறாமல் உள்ளன.
-நூலின் அணிந்துரையில் முனைவர் இராம.குருநாதன்.

|
|
கவிஞர் தாராபாரதியை நெஞ்சில் சிலையாய் நிறுவிக் கொண்டு கவிதைக்கென ஆர்வச் சிறகெழுப்பி வலம் வந்து கொண்டுள்ளார் கவிமுகில்.
கவிமுகிலின் தமிழியம் சார்ந்த அக்கறையும், பெரியாரியம் சார்ந்த பகுத்தறிவுப் பார்வையும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் வெளிப்படத் தவறவில்லை.
பாரதிதாசனின் தமிழியக்கம் இவரிலும் பற்றிப் படர்ந்து கொழுந்து விட்டெரிகிறது.
அளவான கற்பனைகள், ஆரவார மற்ற வர்ணிப்பு, அடக்கமான சொல்லாட்சி என்று கவிதைத் தகுதிகள் இதனுள் இருக்கின்றன்.
கவிமுகில் தொடர்ந்து பின்பற்று வதற்குரிய கவிதையாக்க நெறிமுறைகள் இச்சிறு படைப்பில் உள்ளன்.
தொடரட்டும் கவிமுகிலின் கவிதைப் பயணம்.
|
குப்பைகள்
நூலின் பெயர்: குப்பைகள்
ஆசிரியர்: கவிமுகில்
முதற்பதிப்பு: 16/06/2004
வெளியீடு: கவியரசன் பதிப்பகம், மேடவாக்கம் முதன்மைச்சாலை, ஆதம்பாக்கம், சென்னை - 600088.
தொலைபேசி: 044 - 65334444 . செல்லிடப்பேசி: 9444445555.
நூல் விலை: உரு.50/-

|
கார்காலம்
நூலின் பெயர்: கார்காலம்
ஆசிரியர்: கவிமுகில்
முதற்பதிப்பு: 16/06/2005
வெளியீடு: கவியரசன் பதிப்பகம், மேடவாக்கம் முதன்மைச்சாலை, ஆதம்பாக்கம், சென்னை - 600088.
தொலைபேசி: 044 - 65334444 . செல்லிடப்பேசி: 9444445555.
|
காரு வாங்க போரீங்களா?
கார் வாங்கும்போது கனிக்க வேண்டியவை எவையெவை?
கார் வாங்கும்போது பெற வேண்டியவை எவையெவை?
கார் பெறத் தேவையானவை என்னென்ன?
கார் வாங்குவது பராமரிப்பது
கமிசன் கொடுக்க வேண்டுமா ஏன்?
குறைந்த வட்டியில் கடன் பெறுவது எப்படி?
வாகனப் பராமரிப்பு
வாகன எரிபொருள் சேமிப்பிற்கான வழிமுறைகள்
தகுதிச்சான்றிதழ் பராமரிப்பு
ஆயில் மாற்ற வேண்டிய காலங்கள்
ஆயில் நிரப்பும் கொள்ளளவு
ஆயில் வகைகள்
டயர் அளவுகளின் அட்டவணை
பேட்டரிப்பராமரிப்பு
ஆலோசனைகள்!
நிதி நிறுவனங்கள் மூலம் வாகனம்
வேகத்தடைகளின் வகைகள்
வாகன முன் பரிசோதனை
உட்காரும் விதம்
கிளட்சுகள்
தானியங்கியின் பாகங்கள்
பயன்பட்டுக் கார்களை யாரை நம்பி வாங்குவது?
காரின் பல்வேறு பாகங்கள்?
காருக்குள் சாவியை வைத்துப்பூட்டிவிட்டால் என்ன செய்வது?
எதிர்காலக்கார்கள்
மின்கலம்
என கார் பற்றிய அனைத்து செய்திகளையும் எளிமையாக, அழகான படங்களுடன் தந்திருக்கிறார் கவிஞர் கவிமுகில். கார்காலத்தைக் கவிதை கவிதை காலமாக, எழுத்து நடையில் புதுப்புனைவு செய்திருக்கும் இவர் தமிழில் தொழில் நுட்பங்களை எளிதில் சொல்ல முடியும் என்பதை மெய்ப்பித்து இருக்கிறார்.

|
|
வாழ்க்கையின் அனுபவத்தழும்புகளை அடையாளப்டுத்திக் காட்டிய இந்த நூல், கற்பனைக் குவியலன்று. சமுதாயக் களத்தில் உணர்ந்திருப்பதை நன்கு உணர்த்திக்காட்டும்படியான ஊன்றுகோல் நூல். வாழ்க்கைபோக்கில் இழுக்கு நேர்ந்துவிடும் போதும், வழுக்கிவிடும் போதும், மனத்தை நழுவ விடாமல், வலிமை ஊட்டி, இதயத்தை எஃகாய் ஆக்கி ஏவுகணையாய் பாயும் ஆற்றலைத் தரும்படியான நூல்!
ஒவ்வொரு கணமும் மனிதன் வாழ்க்கையை வெற்றி கொள்ளவே முயல்கிறன். ஆனால் இதற்காக அடையும் வழிவகை தெரியாதிருக்கிறான். இந்த நூலைப்படிதாலே போதும், இதற்காக நாம் மேனாட்டில் தன்னம்பிக்கை நூல்களால் பேர் பெர்ற நார்மன் விசெண்ட் ஃபீல், காஃப் மேயர், போன்றோரின் நூல்களில் தலை நுழைக்கத்தேவையில்லை.இந்த உள்ளூர்த்தன்னம்பிக்கைகாரரான கவி முகிலின் இந்த ஒரு நூலே போதும் வாழ்வில் வெற்றி பெற! இவ்வகையில் அப்துற்றஹீம், உதய மூர்த்தி, மெர்வின் முதலியோர் வரிசையில் அணிசேர்கிறார் இந்நூலாசிரியர் கவிமுகில்.
-நூலின் அறிமுக உரையில் பொன்னி நாடன்
|
எதிரே உன் ஏணி
நூலின் பெயர்: எதிரே உன் ஏணி
ஆசிரியர்: கவிமுகில்
முதற்பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: வள்ளிசுந்தர் பதிப்பகம் ப.எண்:43/14,பு.ஏண்:84/14, மீர் பக்க்ஷி அலி தெரு, இராயப்பேட்டை,சென்னை-600014.
செல்லிடப்பேசி: 9840168517.
நூல் விலை: உரு.30/-

|
மோட்டுவளை
நூலின் பெயர்: மோட்டுவளை
ஆசிரியர்: கவிமுகில்
ஓவியம்: செழியன்
முதற்பதிப்பு: 16.06. 2007
வெளியீடு: கவியரசன் பதிப்பகம் 169, மேடவாக்கம் முதன்மை சாலை, சென்னை-600088.
செல்லிடப்பேசி: 9444445555.
நூல் விலை: உரு.100/-
|
கலங்காலமாக அடக்கப்பட்ட,நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் குரலாய் ஒலித்திருக்கிறார் கவிமுகில். இக்கவிதைகள் நம் உள்மன ஆழத்தில் நெடிய சலனங்களை ஏற்படுத்துகின்றன. விளிம்புநிலை மக்களின் உரைகள் உண்மையின் உரைகல். இந்நூல் சமூகத்தின் இன்னொருப்பக்கத்தினைப் புரட்டுகிறது; பல புரட்டுகள் உடைபடுகின்றது. நூல் நெடுக இயல்பாய் பிணைந்திருக்கின்றன செழியனின் ஓவியங்களும், சிற்பங்களும்.
-தமிழ்

|
|
|
தமிழ் நூலகம்
|
தமிழ்த்தளங்கள்
|
திரைப்படங்கள்
|
இணைப்புகள்
|
பிற தளங்கள்
|
|