தமிழகம்.வலை

உலகத்தமிழர்களே,

வணக்கம்.

தமிழகம்.வலை, தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணைய தளமாகும். உலக மொழிகளில் தொன்மையானதாக விளங்கும் தமிழைப் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் உலகத் தமிழர்களை ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும் இத்தளம் செயல்படும். உலகத்தமிழர்களின் குமுக, பொருளியல் வாழ்க்கை மேம்பாட்டிற்கான உறுதுணையாக விளங்கும்.

கல்வெட்டு முதல் கணினி வரைத்தொடரும் தமிழின் ஓட்டத்தில், இணையதளத்தில் தமிழின் மேம்பாட்டிற்கும், உலக அளவிலுள்ள தமிழ் இணையங்களின் ஒருங்கிணைப்பிற்கும் பாலமாகத் இத்தளம் திகழும். இத்தளம் அறிவியல் விழிப்புணர்வு, சூழியல், இயற்கை வேளாண்மை, தமிழ் மருத்துவம், மாந்த உரிமைகள், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக ஒலிக்கும்.

தமிழகம்.வலை, தமிழின் தொன்மையான கலை,இலக்கியங்களை உலக அளவில் திரட்டி, பாதுகாத்துப் பரப்பும் ஊடகமாக விளங்கும். உலகத் தமிழர்களின் ஒன்றிணையமாக, தமிழ்,தமிழரின் மேம்பாட்டுக்களமாக, இத்தளம் விளங்க, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் உங்கள் படைப்புகளை விடுக்கவும் விழைகிறோம் .

மிக்க நன்றி!

தோழமையுடன்,

தமிழகம் ஊடக நிறுவனம்


Bookmark and Share   Lunarpages Affiliate Program